முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குன்னூரில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் புலி, கருஞ்சிறுத்தை!

குன்னூர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஆக்ரோஷமாக சாலையில் சுற்றித்திரிவதாலும் குடியிருப்பு பகுதிகளில் கருஞ்சிறுத்தை புகுந்து அட்டகாசம் செய்வதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் புகுந்து வளர்ப்பு நாளை தூக்கிச் சென்ற கருஞ்சிறுத்தை

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அண்மை காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் வளர்க்கப்பட்ட நாயை கருஞ்சிறுத்தை ஒன்று தூக்கி சென்றது.
இந்த நிலையில் பெரிய வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதியில் சாலையில் ஆக்ரோஷத்துடன் புலி ஒன்று திரிந்து கொண்டிருப்பதை இரு சர்க்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதனை அவர்கள் சமூக வளைதலங்களில் பதிவேற்றம் செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து வீடியோ காட்சிகள் குறித்தும், எந்தப் பகுதியில் அந்தப் புலி நடமாடுகிறது என்பது குறித்தும் வனத்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புலி நடமாட்டம் குறித்து வெளியான வீடியோவால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Advertisement:

Related posts

நாட்டில் 29-வது நாளாக குறையும் கொரோனா பாதிப்பு!

நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

Nandhakumar

கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி!

Ezhilarasan