நெய் டப்பாவில் வாயை விட்டு மாட்டிக் கொண்ட காளை!

நெய் டப்பாவில் வாயை விட்டு மாட்டிக் கொண்ட காளையை பொதுமக்கள் மீட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் 23வது வார்டுக்குட்பட்ட நேரு நகரில் காளை மாடு ஒன்று வாயில்…

நெய் டப்பாவில் வாயை விட்டு மாட்டிக் கொண்ட காளையை பொதுமக்கள் மீட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் 23வது வார்டுக்குட்பட்ட நேரு நகரில் காளை மாடு ஒன்று வாயில் நெய் டப்பா மாட்டிக்கொண்டு ரத்தம் சிந்த சிந்த வலம் வந்து கொண்டிருந்தது. அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், காளையை கயிறுகளால் கட்டி கீழே படுக்க வைத்து வாயில் மாட்டி கொண்டிருந்த தகர டப்பாவை அகற்றினர்.

அப்போது மயக்க நிலையில் இருந்த காளையின் முகத்தில் பொதுமக்கள் தண்ணீர் தெளித்த, குடிப்பதற்கும் நீரையும் வைத்தனர். பின்பு மயக்க தெளிந்த காளை தண்ணீரை குடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. பல மணி நேரம் போராடி காளையின் வாயில் இருந்த டப்பாவை மீட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.