‘அடுத்த பட்ஜெட் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும்…’ – திரௌபதி முர்முவின் உரையில் இடம் பெற்ற 10 முக்கிய அம்சங்கள்…

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியதை முன்னிட்டு,  நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று உரையாற்றினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையில் இடம்பெற்ற…

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியதை முன்னிட்டு,  நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று உரையாற்றினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையில் இடம்பெற்ற 10 முக்கிய அம்சங்கள்: 

  1.  மக்களவை தேர்தல் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது.  இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக நிலையான மற்றும் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதை உலகமே உற்று நோக்குகிறது.
  2.  இந்தியா இப்போது உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது.  இந்த அரசு தனது பதவி காலத்தின் முதல்பட்ஜெட்டை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளது.  இந்த வரவுசெலவுத் திட்டம் அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் எதிர்கால தொலைநோக்குப் பார்வைக்கு பயனுள்ள ஆவணமாக இருக்கும்.  முக்கிய பொருளாதார மற்றும் சமூக முடிவுகளுடன், பல வரலாற்று நடவடிக்கைகளும் இந்த பட்ஜெட்டில் காணப்படுகின்றன.
  3. காஷ்மீரில் பல வாக்குச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.  ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த மக்களே இந்த தேர்தளில் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
  4. பிரதமர் கிசான் சம்மான் நிதியின் கீழ் இந்த அரசு ரூ.3.20 லட்சம் கோடியை நாட்டின் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.  இந்த ஆட்சியின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 20,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  காரீஃப் பயிர்களுக்கான MSP யிலும் அரசாங்கம் சாதனை படைத்துள்ளது.  இன்றைய இந்தியா தனது தற்போதைய தேவைகளை மனதில் கொண்டு விவசாய முறையில் மாற்றங்களை செய்து வருகிறது.
  5. உலக நண்பனாக,  பல உலகளாவிய பிரச்சனைகளை தீர்க்க இந்தியா முன்முயற்சிகளை எடுத்துள்ளது.  இன்று இந்தியா உலகின் சவால்களை அதிகரிப்பதற்காக அல்ல,  மாறாக தீர்வுகளை வழங்குவதற்காக அறியப்படுகிறது.
  6.  கடந்த 10 வருடங்களில் வடகிழக்கில் நிலையான சமாதானத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.  பல பழைய சர்ச்சைகள் தீர்க்கப்பட்டுள்ளன. பல உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
  7. இந்திய நீதித்துறை சட்டம் ஜூலை 1 முதல் நாட்டில் அமலுக்கு வருகிறது.  இப்போது தண்டனையை விட நீதிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.  இது அரசியலமைப்பின் அடிப்படை ஆன்மாவும் கூட.
  8. சமீபத்தில் நடந்த சில தேர்வுகளின் வினாத்தாள் கசிவு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது.  பல மாநிலங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்களை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்,  இதுபோன்ற சூழ்நிலையில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.  தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடாளுமன்றமும் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.
  9.  நாட்டின் ஏழைகள்,  இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரம் பெற்றால் மட்டுமே வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது சாத்தியமாகும்.  அதனால்தான் இந்த அரசில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  அரசின் ஒவ்வொரு திட்டங்களின் பலன்களையும் அவர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம்.
  10.  CAA உடன்,  அரசாங்கம் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தொடங்கியுள்ளது.  இதன் மூலம் பலருக்கு மரியாதையுடன் வாழ வாய்ப்பு கிடைத்துள்ளது.  இந்த சட்டத்தின்கீழ் குடியுரிமை பெறும் மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை பெற்று தர விரும்புகிறேன்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.