நியூஸ்7 தமிழ் செய்தி தொலைக்காட்சியின் சார்பாக ஆண்டு தோறும் வழங்கப்படும் “தங்கத் தாரகை” விருது வழங்கும் விழா, சென்னையில் லீ மெரிடியன் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற உள்ளது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்படும் நிலையில், இது தொடர்பாக மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”தமிழ் ரத்னா” மற்றும் ”தங்கத் தாரகை” உள்ளிட்ட விருதுகளை நியூஸ்7 தமிழ் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள பாலின சமத்துவ மாத கொண்டாட்டத்தினை தொடர்ந்து “தங்கத் தாரகை” விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
தங்கத் தாரகை விருது வழங்கும் விழாவில் அரசியல் , நிர்வாகம், கலை , சினிமா உள்ளிட்ட துறைகளை சார்ந்த ஆளுமைகள் பங்கேற்க உள்ளனர். இதனை தொடர்ந்து தொழில்நுட்பத்தில் மகளிர் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
தங்கத் தாரகை விருது வழங்கும் விழாவில் கல்வி, எழுத்து, கலை, மருத்துவம், தொழில், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல், விளையாட்டு, ஆடை வடிவமைப்பு, மற்றும் வாழ்நாள் தாரகை மற்றும் சிறப்பு தாரகை விருதுகள் என 11 விருதுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.ஜேம்ஸ் லிசா