புதுச்சேரியில் நாய் கண்காட்சி: சிறந்த நாய் மற்றும் பூனைக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

புதுச்சேரியில் நடைபெற்ற நாய் மற்றும் பூனை கண்காட்சியில் பல்வேறு வகையை சேர்ந்த ஏராளமான நாய்கள் மற்றும் பூனைகள் கலந்து கொண்டன, இதில் சிறந்த நாய்  மற்றும் பூனைக்கு சட்டபேரவை தலைவர் செல்வம் மற்றும் கால்நடைத்துறை…

புதுச்சேரியில் நடைபெற்ற நாய் மற்றும் பூனை கண்காட்சியில் பல்வேறு வகையை
சேர்ந்த ஏராளமான நாய்கள் மற்றும் பூனைகள் கலந்து கொண்டன, இதில் சிறந்த நாய்  மற்றும் பூனைக்கு சட்டபேரவை தலைவர் செல்வம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினர். 

புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில்
நாய்கள் மற்றும் பூனைகள் எழல் கண்காட்சி கடற்கரை சாலை காந்தி திடலில்
நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் ஜெர்மன்செப்பட், ஸ்பிட்ஸ், புல்டாக், டாபர் மேன், லேபர்டாக், ஷிட்-சூ, டால்மேஷன், கோல்டன் ரெட்ரீவர் உள்ளிட்ட 26 வகையான நாய்களும், 8 வகையான பூனைகளும் என மொத்தம் 130 செல்லப்பிராணிகள் கலந்து கொண்டன.

அதே போல் காவல் துறை சார்பில் கலந்து கொண்ட ஐந்து நாய்கள் உயரம்
தாண்டுதல், நீலம் தாண்டுதல், மோப்பம் பிடித்தல் உள்ளிட்ட சாகசங்கள் செய்து
காண்பித்தன.

இதில் கால்நடைத்துறை மருத்துவர்கள் நடுவர்களாக பணியாற்றி கண்காட்சியில் கலந்து
கொண்ட செல்லப் பிராணிகளின் உடல் வலிமை, தோற்றம் ஆகியவற்றின் மூலம் சிறந்த
நாய்கள் மற்றும் பூனைகளை தேர்வு செய்தனர்.

தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட செல்ல பிராணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சட்டபேரவை தலைவர் செல்வம், கால்நடைத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று சிறந்த நாய்கள் மற்றும் பூனைகளுக்கு பரிசுகளை வழங்கினர். இக்கண்காட்சியை ஏராளமான பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.