கடந்த ஆண்டு பயணிகள் போக்குவரத்தில் ரூ.5,779 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது: கணிசமான வளர்ச்சி தெற்கு ரயில்வே 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரையிலான (2022-2023 நிதியாண்டில்) உற்பத்தி சரக்குகள் 3 கோடி 39 லட்சம் டன்கள் கொண்டு சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 2 கோடி 74 லட்சம் டன் ஆக இருந்த சரக்கு போக்குவரத்து 24 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் ரயில்வே வாரியத்தின் இலக் கான 3 கோடியே 22 லட்சம் என்னைவிட இது 5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஏப்ரல்-பிப்ரவரி 2023 வரை சரக்கு ரயில் போக்குவரத்தில் ரூ.3,230.40 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. பயணிகள் போக்குவரத்து தெற்கு ரயில்வே, பயணிகளின் தோழமை மண்டலமாகச் செயல்பட்டு வருகிறது.
கணிசமான வளர்ச்சி தெற்கு ரயில்வே பயணிகள் மற்றும் சரக்கு பிரிவில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் ஏப்ரல்-பிப்ரவரி 2023 காலகட்டத்தில், 3 கோடியே 39 லட்சம் டன்கள் உற்பத்தி சரக்குகளைக் கொண்டு சேர்த்ததில் ரூ.3,230.40 1 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.
மேலும் கடந்த 2022-23 நிதியாண்டில் ஏப்ரல்-பிப்ரவரி 2023 வரை, 58.26கோடி பயணி களை சுமந்து பயணித்துள்ளது மற்றும் ரூ.5,779 கோடி இதனிடையே அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கையாள, முன்பதிவு செய்யப்பட்ட, முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களை பண்டிகை காலங்களில் இயக்கி வருகிறது.
கடந்த நிதியாண்டின் (2021- 22) தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ஏப்ரல்-பிப்ரவரி 2023-ல் (2022- 23 நிதியாண்டில்) பயணிகள் போக்குவரத்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. தெற்கு ரயில்வே கடந்த ஆண்டு தமது மொத்த பயனாளர்களுக்கு வழங்கிய சேவை (29.26 கோடி பயணி கள்) அளவைக் காட்டிலும் ஏப்ரல்-பிப்ரவரி 2023 காலகட்டத்தில் சேவையை இரட்டிப் பாக்கி, 58.26 கோடி பயணிகளுக்கான சேவையை வழங்கியுள்ளது. இதன் மூலம் ரயில் பயணிகளின் வழியாக ரூ.5,779 5 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.