32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒப்பில்லா 9ம் ஆண்டில் நியூஸ் 7 தமிழ்: ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் வாழ்த்து

ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழின் வெற்றிகரமான பயணத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், முன்னணி செய்தி சேனலான நியூஸ் 7 தமிழ் தமது பயன்மிகு முக்கியப் பயணத்தில் 9ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜனநாயகத்தைக் காப்பாற்றி நிலைநாட்டுவதிலும் பொறுப்புள்ள நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதிலும் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஒருபுறத்தில் நடப்பு நிகழ்வுகள், அவற்றின் முன்னேற்றங்கள் மற்றும் கொள்கைகளையும்; மற்றொரு புறத்தில் ஆய்வு செய்யப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் கருத்துக்களையும் மக்களுக்குத் ஊடகங்கள் தெரியப்படுத்துகின்றன.

Image

அரசாங்கத்தை விழிப்போடும், முக்கியப் பிரச்சனைகளில் மக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு கொண்டதாகவும் ஊடகங்கள் இருக்கின்றன. நம்மை போன்ற பரந்துபட்ட மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகத்தில் ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்கு எல்லாவற்றையும் விட மிகவும் அத்தியாவசியமானது. நியூஸ் 7 தமிழ் குடும்பத்தின் இதுவரையிலான வெற்றிகரமான பயணத்துக்கும் எதிர்காலத்தில் மிகச் சிறந்த செயல்பாட்டுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு ஆளுநர் என்.ஆர்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

9ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பியிருக்கும் வாழ்த்துச் செய்தியில், தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளில் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, பரபரப்பு செய்திகளை தனிச்சிறப்புடன் வழங்குவது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சென்று அரசுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி துணை நிற்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image

ஆக்கப்பூர்வமான செய்திகள், விவாதங்களை ஒளிபரப்பி, தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மேலும் சிறப்புக்குரிய இடத்தை நியூஸ் 7 தமிழ் பிடிக்க வேண்டும். என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பெற்றிருக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்களை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு தெரிவிப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சசிகலா உள்ளிட்ட பலர் நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading