அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிசூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஆங்கில புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது போல சீனாவில் சூரிய-சந்திர காலண்டரின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 22ம் தேதி சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டிற்கு சீனர்கள் அனைவரும் ஒன்றுகூடி கலைநிகழ்ச்சிகளை கண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. சீனப் புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மாண்டரி பூங்காவில் மக்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தனர். இந்த கொண்டாட்டங்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும். கலிபோர்னியா மாகாணத்திலேயே நடைபெறும் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் இதுவேயாகும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் கேளிக்கைகள் , ஷாப்பிங் மற்றும் சீன உணவுகளை வாங்கி மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் கிட்டத்தட்ட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. துப்பாக்கி சூட்டில் பலர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாண்டரி பூங்காவைச் சுற்றியுள்ள பகுதி ஆசிய அமெரிக்க மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் புதிதான ஒன்று அல்ல. துப்பாக்கி உரிமங்களை பலர் பெற்றுள்ளதால் துப்பாக்கி கலாச்சாரம் அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.