46 ஆவது புத்தக கண்காட்சியின் கடைசி நாளான இன்று புத்தகங்களை வாங்க ஆர்வமுடன் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் வாசி திறனை வளர்க்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையில் உள்ள நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 16 வது நாளாக நடைபெற்று வரும் 46வது புத்தக கண்காட்சி விழாவின் கடைசி நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் தமக்கு தேவையான புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என குடும்பம் குடும்பங்களாக வந்து அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் தேவையான புத்தகங்களை தேடித்தேடி ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
46வது புத்தக கண்காட்சி இன்று கடைசி நாளாக இருப்பதால் இன்று அதிகமான புத்தகங்கள் விற்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த புத்தக கண்காட்சிக்கு சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்காக ஆர்வத்துடன் வந்தனர்.
நிறைவு நாளான இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனை பொதுமக்கள் ஆர்வமுடனும் கண்டு களித்தனர். இந்த புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு ஆறு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் பொதுமக்களின் நடைமேடை அளவை குறைத்து 200 அரங்குகள் கூடுதலாக அமைக்கப்பட்டது. அதேபோல புத்தக கண்காட்சியில் இரண்டு புதுமையான அரங்குகள் பார்வையாளர்களை கவர்ந்தன. திருநங்கைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ”குயீர் பதிப்பக அரங்கு” மற்றும் சிறைவாசிகளுக்கென புத்தக தானத்தை வலியுறுத்தி சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பாக ”கூண்டுக்குள் வானம்” எனும் புத்தக அரங்கும் மக்களை வெகுவாக கவர்ந்தது.