நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சாணிக் காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷ் நடிக்க உள்ள கேப்டன் மில்லர் படத்தை இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.1930-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படத்திற்கான முதல் அறிவிப்பாக, தனுஷின் பிறந்த நாளையொட்டி மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிறச் செய்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோக்களை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் படத்திற்கான செட் அமைப்பது, படப்பிடிப்பு போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த வீடியோவில் நடிகர் தனுஷ் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.