முக்கியச் செய்திகள் தமிழகம்

புதியக் கட்டுப்பாடுகள்-எவற்றுக்கெல்லாம் அனுமதி; முழு விவரம்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜன.6 முதல் 10ம் தேதி வரை கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்திருந்தது இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனுமதிக்கப்பட்டுள்ளவை

 • கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்
 • பேருந்து, புறநகர் இரயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி
 • பொது/தனியார் பேருந்து போக்குவரத்து தொற்று பாதுகாப்பு உரிய நெறிமுறைகளுடன் தொடரும்
 • இரவு நேர ஊரடங்கின்போது பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி
 • சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்
 • தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து இயக்க உத்தரவு
 • திருமண நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதி
 • துணிக்கடைகள்/நகைக்கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்
 • உடற்பயிற்சி கூடங்கள், யோகா நிலையங்கள் மற்றும் அனைத்து திரையரங்குகளும் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதி

அனுமதி மறுக்கப்பட்டவை

 • பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை
 • அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது மக்களுக்கு அனுமதி மறுப்பு
 • அரசு, தனியார், மருத்துவம் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளைத் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு ஜன.20ம் தேதி வரை விடுமுறை
 • தொற்றைக் கட்டுப்படுத்த பயிற்சி நிலையங்கள் (Training and coaching centres) செயல்பட தடை
  மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி மறுப்பு
 • அனைத்து பள்ளிகளிலும், 1-9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை
  அனைத்து தனியார்/அரசு சார்பில் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது
 • ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்வோர் அலுவலக அடையாள அட்டை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்
Advertisement:
SHARE

Related posts

“கலைஞர் நினைவு நூலகம் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்”

Gayathri Venkatesan

ரூ.100 கோடி வசூல்; ‘டாக்டர்’ இயக்குநர் நன்றி

Halley Karthik

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்: மா.சுப்பிரமணியன்!

Vandhana