டெல்லியை கொரோனா தொற்று 5வது முறையாக தாக்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில், 5,481 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கட் கிழமை 6.46% ஆக இருந்த தொற்று பாதிப்பு விகிதமானது, செவ்வாய்க் கிழமை 8.3% ஆகவும், அதே இன்று 10% ஆகவும் அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதே நிலை நீடித்தால் இன்று டெல்லி முழுவதும் ஏறத்தாழ 10,000 பேர் வரை தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மட்டுமல்லாது, இந்தியாவை கொரோனா மூன்றாவது அலை தாக்கியுள்ளது என்றும் டெல்லியை ஐந்தாவது முறையாக தாக்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து டெல்லி மக்களை எச்சரித்த அவர்,
ஒமிக்ரான் தொற்று பாதிப்பு லேசான அறிகுறிகளுடன் உள்ளது. ஆனாலும் கொரோனா தொற்றுக்கான கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதே போல தொற்று பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் ஏற்படும் நெருக்கடியை தவிர்த்திட அனைத்து மருத்துவமனைகளிலும் 40% படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் பாதிப்பை பொறுத்த அளவில், தினசரி 300-400 மாதிரிகள் மட்டுமே பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. கொரோனா பரிசோதனையை பொறுத்த அளவில் இன்று மட்டும் 90,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும், தனியார் அலுவலகங்கள் 50% எண்ணிக்கையிலும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.