செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

எம்-சாண்ட் உற்பத்தியை ஒழுங்குப்படுத்துவதற்கான புதிய கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். கட்டுமானங்களில் எம்-சாண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆற்று மணலுக்கு காத்திருக்காமல் எம்-சாண்டை பயன்படுத்தி கட்டுமானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று மாசுகட்டுப்பாட்டு…

எம்-சாண்ட் உற்பத்தியை ஒழுங்குப்படுத்துவதற்கான புதிய கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

கட்டுமானங்களில் எம்-சாண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆற்று மணலுக்கு காத்திருக்காமல் எம்-சாண்டை பயன்படுத்தி கட்டுமானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்து இருந்தது. இதன் அடிப்படையில், எம்-சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு போதுமான சலுகைகள் வழங்கி அதனை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், எம்-சாண்டுக்கான புதிய கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

இதன் மூலம், எம்-சாண்ட் உற்பத்தி செய்வதற்கான தனிப்பட்ட குவாரி குத்தகைகள் வழங்கப்பட மாட்டாது. செயற்கை மணல், அரவை மணல் உற்பத்திக்கு தனிப்பட்ட குவாரி குத்தகைகள் வழங்கப்பட மாட்டாது என முதலமைச்சர் வெளியிட்டுள்ள செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவற்கான புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதே போல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ.189.49 கோடி செலவிலான புதிய கட்டடங்கள், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.47.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து உற்பத்தி நிலையம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.61.32 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ.11.66 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.