விற்பனை கூடத்தில் திருடுபோகும் மணிலா பயிர்கள்; சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

குறிஞ்சிப்பாடி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் மணிலா பயிர் திருட்டு போவதாகவும்  உள்ளூர் வியாபாரிகள் மட்டும் அனுமதிப்பதகவும் கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இயங்கி வரும் ஒழுங்குமுறை…

குறிஞ்சிப்பாடி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் மணிலா பயிர் திருட்டு போவதாகவும்  உள்ளூர் வியாபாரிகள் மட்டும் அனுமதிப்பதகவும் கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை
கூடத்தில் தற்பொழுது மணிலா பயிர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாள் ஒன்றுக்கு 2000 முதல் 3000 மூட்டைகள் வருவதாகவும் அதில், ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் 150 குவியல்களை மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விவசாயிகளின் மணிலா பயிர், மூன்று முதல் நான்கு நாட்கள் வரை விற்பனை ஆகாமல் கிடங்கில் தேங்கி நிற்பதாகவும் இதில் விவசாயிகளின் மணிலா பயிர் கள் திருடு போவதாகவும் கூறுகின்றனர்.  இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் சரியான பதில் கூற வில்லை எனவும் வெளியூர் வியாபாரிகளை அனுமதிக்காமல் உள்ளூர் வியாபாரி களை வைத்து மட்டுமே அதிகாரிகள் லஞ்சம் பெற்று அனுமதிப்பதாகவும்  விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் தான் மணிலா பயிர், விற்பனை ஆகாமல் பல நாட்களாக தேங்கியிருப்பதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் எதிரே குறிஞ்சிப்பாடி சிதம்பரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்னைக்கு உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.