கன்னியாகுமரியில், மது போதையில் புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிளை குத்தி கொலை – கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜா என்பவரை கன்னியாகுமரி போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே சகாய மாதா தெருவைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (37). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் இன்று இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அருகே உள்ள ராஜா என்பவரது வீட்டில் மது அருந்தி உள்ளார்.
அப்போது அவருடன் இருந்த ராஜா என்பவருக்கும் கவாஸ்கருக்கும் இடையே மது போதையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகராறு கைகலப்பாக மாற ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு கவாஸ்கர் கழுத்தில் குத்தியுள்ளார்.
அண்மைச் செய்தி: டெல்லி: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை ஊர்வலம் அழைத்து சென்ற குடும்பம்
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கவாஸ்கரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணமான மூன்றே மாதத்தில் வாலிபர் கொலையான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







