சிலம்பம் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்திய சிலம்பம் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தினர்.
சிலம்பம் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்திய சிலம்பம் கூட்டமைப்பின் தெற்கு மண்டல செயற்குழு கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது.
இந்திய சிலம்ப கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில், இந்திய சிலம்பம் கூட்டமைப்பின் எதிர்கால திட்டங்கள், தேசிய அளவில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துவது போன்ற அலோசனைகள் நடந்தது.
அண்மைச் செய்தி: புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை
மேலும், சிலம்பம் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிக்கு கொண்டு செல்வதற்காக தொழில்நுட்ப விதிகளை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








