ராஜஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்!

ஐ.பி.எல் 2021ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 2021 வரும் ஏப்ரல் 9-ன் தேதி அன்று தொடங்க இருக்கிறது. ராஜஸ்தான்…

ஐ.பி.எல் 2021ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் 2021 வரும் ஏப்ரல் 9-ன் தேதி அன்று தொடங்க இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 12-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில், ஐ.பி.எல் 2021 இல் ராஜஸ்தால் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தை அணியிலிருந்து விடுவித்த பின்னர், பல மூத்த விளையாட்டு வீரர்கள் இருந்தப்போதும், சஞ்சு சாம்சனுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடைய வாழ்க்கையில் ஐ.பி.எல் கேப்டனாக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

கேரளா அணியின் விளையாட்டு வீரராக திகழும் இவர், லெஜெண்ட் பிலேயரான குமார் சங்ககாராவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இலங்கையின் முன்னாள் கேப்டனான குமார் சங்ககாரா தற்போது, IPLயின் “Director of Cricket” ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், அணியின் முழு வளர்ச்சிக்கான பொறுப்பினை ஏற்றுள்ளார்.

இதுகுறித்து ரசிகர்கள் சஞ்சு சாம்சனிடம் கேட்டப்போது, குமார் சங்கக்காராவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், தான் கேப்டனாக இருக்கும் போது அவர் பயிற்சியாளராக இருப்பது எனக்கு பெருமை அளிக்கிறது என்றும் தெரிவித்தார். ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழி நடத்துவது தனக்கு உற்சாகம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.