கொரோனா தடுப்பூசி : ஜோ பைடன் அதிரடி

அமெரிக்காவின் 90 சதவிகித முதியோர்களுக்கு மூன்று வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று சீனாவிலிருந்து பரவத்தொடங்கி உலக நாடுகள் அனைத்தையும் பாதித்தது.…

அமெரிக்காவின் 90 சதவிகித முதியோர்களுக்கு மூன்று வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று சீனாவிலிருந்து பரவத்தொடங்கி உலக நாடுகள் அனைத்தையும் பாதித்தது. இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொற்று வேகமாக பரவி, லட்ச கணக்கானோர் உயிரிழந்தனர். இதுவரை அமெரிக்காவில் 3.04 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5,50,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைப்பற்றி முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கவலை கொள்ளவில்லை என்றும் தொற்றைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அமெரிக்காவின் அதிபரான ஜோபைடன் தான் பதவியேற்ற 100 நாட்களில் 2 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசிப்போடப்படும் என்று அவர் முன்பே உறுதியளித்திருந்தார். இந்நிலையில் 3 வாரங்களுக்குள் அமெரிக்காவின் 90 சதவிகித முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடப்படும் என்றும் 17,000 தடுப்பூசி முகாம்கள் 40,000 ஆக அதிரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.