ஹோலி கொண்டாட்டத்தின் போது தனது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கவலைகளை மறந்து பல வண்ணங்களுடன் இன்பத்தை வரவேற்கும் பண்டிகையாக ஹோலி பார்க்கப்படுகிறது. இப்பண்டிகையைப் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். ஹோலி கொண்டாட்டத்தின் போது, சன்னி லியோன் அவரின் கணவர் “டானியல் வேபர்” மற்றும் அவரின் குழந்தைகள் “நிஷா, அஷெர், நோஸ்” இவர்களுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பகிர்ந்திருந்தார்.

பகிர்ந்த இந்த புகைப்படங்கள் அவரின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







