தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில். இந்த கோயிலில் ஆனித்திருவிழா மிகவும் பிரசிதிபெற்றதாகும்.
இந்த நிலையில், நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 8ம் தேதி நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் தினந்தோறும் காலை மாலை சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும். ஆனித் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.








