தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, ஆட்சி மாற்றம்தான் ஏற்படுகிறதே தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜேசுதாசனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவச குடிநீர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து பட்டியலிட்டார்.
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே கொள்ளையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இரண்டு கட்சிகளிலும் ஊழல் இருப்பதாகவும் சாடினார்.
ஸ்டெர்லைட், கூடங்குளம், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை இந்த கட்சிகள் கொண்டு வந்ததாகவும், நீட் தேர்வுக்கு காங்கிரஸ் கட்சி கோடு போட்டதாகவும், பாஜக அதில் ரோடு போட்டதாகவும் கூறினார். நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அதனை எதிர்ப்பதாக கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும் சீமான் குறிப்பிட்டார்.