நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் : மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழக மக்கள்…

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன் நேற்று மாலை டெல்லி சென்றார். தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து அவர் பேச இருப்பதாக தெரிவித்த அவர், மத்திய அரசிடம் 13 கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் நேற்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டுக்கு தடுப்பூசியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி திறப்பு, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டிய அந்த அவசியத்தையும் எடுத்துச் சொல்ல இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய மனுவை அவரிடம் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.