பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய பரமக்குடி ஆட்டுச்சந்தை

ஆடி மாதப் பிறப்பு மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பரமக்குடி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைக்கட்டியது. தென்மாவட்டத்தில் ஆடுகள் விற்பனைக்கு பிரசித்தி பெற்றது பரமக்குடி ஆட்டுச்சந்தை. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆட்டுச்சந்தைக்கு மதுரை, தேனி,…

ஆடி மாதப் பிறப்பு மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பரமக்குடி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைக்கட்டியது.

தென்மாவட்டத்தில் ஆடுகள் விற்பனைக்கு பிரசித்தி பெற்றது பரமக்குடி ஆட்டுச்சந்தை. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆட்டுச்சந்தைக்கு மதுரை, தேனி, விருதுநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் வருவது வழக்கம்.

சாதாரண நாள்களில் 30 முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலும், விழாக்காலங்களில் ஒரு கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படும். இந்நிலையில், ஆடி மாதப் பிறப்பு மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச்சந்தையில் விற்பனை களைக்கட்டியது. பத்து கிலோ எடை கொண்ட ஆடு 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.