புதிய ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
மாஸ்டர் கார்டு, விசா உள்ளிட்ட நிறுவனங்கள், வங்கிகளுக்கான ஏடிஎம். மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
ஆறு மாதங்களுக்குள், வாடிக்கையாளர்களிடம் சேகரித்த தகவல்கள் மற்றும் பணபரிமாற்ற விவரங்களை இந்தியாவில் மட்டுமே சேகரித்து வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. இந்த விதிமுறையை, மாஸ்டர் கார்டு நிறுவனம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நிறுவனம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க, இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. ரிசர்வ வங்கியின் இந்த முடிவு, ஜூலை 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
இதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர் கார்டுகளை வங்கிகள் வழங்காது. அதே நேரம் மாஸ்டர் கார்டு பயன்படுத்துவோருக்கு இந்த தடை காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படாது.







