நீட் எதிர்ப்பு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை திருமாவளவன் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அல்லது உளவுத்துறை அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: “சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை” – இபிஎஸ்
தன்னுடைய பெயரை அனைத்து தொலைக்காட்சிகளும் உச்சரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏதேனும் ஒன்றை பற்றி பேசி வருவதாகவும் திருமாவளவன் கூறினார். நீட் விலக்குக் கோரும் தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், குடியரசுத் தலைவர் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.