முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுமத்தாருக்கு, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து  ரூ. 2 லட்சம் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்திலிருந்து திருப்பதி நோக்கி திருமண நிகழ்ச்சிக்காக பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் 63 பேர் பயணித்தனர். அப்போது, பேருந்து காட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் விபத்து நடந்த பகுதிக்கு அருகே இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பேசிய அப்பகுதி காவல்துறை எஸ்பி, ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்று தெரிவித்தார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, சித்தூரில் நடந்த பேருந்து விபத்து பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடுபத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்த பிரதமர், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு 50,000 ரூபாயும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். திருப்பதிக்கு அருகே எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் நிலை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

G SaravanaKumar

கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி மனு!

Vandhana

POCO X5 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் – அசத்தலான சிறப்பம்சங்களுடன் மலிவான விலையில்!

G SaravanaKumar