சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற அதிமுக அமைப்பு தேர்தலில் பங்கேற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், துபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி முடிகிற தருவாயில் தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் திறந்து வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.
தாம் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்த போது தம்முடன் அமைச்சர்கள், அதிகாரிகளே உடன் வந்ததாகவும், ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினுடன் குடும்பத்தினர் இருப்பதையும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். தாம் வெளிநாடு சென்ற போது மு.க. ஸ்டாலின் பேசிய வீடியோ காட்சியையும் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.
அண்மைச் செய்தி: “ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்”
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருவதால், தனது தனிப்பட்ட கருத்தை கூறக்கூடாது என்று கூறினார். எற்கனவே பொதுக்குழுவில் முடிவுசெய்தபடி, அதிமுகவில் சசிகலாவை, சேர்க்க வாய்ப்பே இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி உறுதி கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








