முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா வணிகம்

டீ கடையில் முதலீடு செய்த லேடி சூப்பர் ஸ்டார்

நடிகை நயன்தாரா பிரபல டீ நிறுவனமான ’சாய் வாலே’-வில் முதலீடு செய்துள்ளார்.

நடிப்பை தாண்டி நடிகர், நடிகைகள் சிலர் பிசினஸ் செய்து வருகின்றனர். சிலர், நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, சாய் வாலே (Chai Waale) என்ற டீ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில், கிளைகளை அதிகரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.5 கோடியை அந்த நிறுவனம் பெற முடிவு செய்தது. இதையடுத்து ஏஞ்சல் முதலீட்டாளர்கள், மும்பையைச் சேர்ந்த யுனி-எம் நெட்வொர்க் (UNI-M Network)கும் இந்த நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளது.

சுனில் சேத்தியா, சுனில் குமார் சிங்க்வி, மனிஷ் மார்டியா போன்ற முதலீட்டாளர்கள் உள்ள இந்தப் பட்டியலில் இப்போது, நடிகை நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து சாய் வாலே நிறுவனர் விதுர் மகேஸ்வரி கூறும்போது, ‘அடுத்த வருடத்துக்குள் 35 கடைகளை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். மீதமுள்ள தொகையை எங்கள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்’ என தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் மால்களில், சாய் வாலே கிளைகளைத் திறக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருவாரூரில் 33% வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும்- அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

G SaravanaKumar

ஈரோடு இடைத்தேர்தல்; 35இடங்களில் செக்பாய்ண்ட் அமைத்து காவல்துறை சோதனை

Web Editor

பார்த்தா சாட்டர்ஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Mohan Dass