36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

டிஜிட்டலில் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘நாயகன்’…

கமல்ஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக  நாயகன் திரைப்படம் டிஜிட்டலில் ரீ- ரிலிஸாகிறது.

சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி, கார்த்திகா, விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தை முகுந்தன் ஸ்ரீனிவாசன் தயாரித்திருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு மேற்கொண்டிருந்தார். லெனின், வி.டி.விஜயன் இருவரும் படத்தொகுப்பு செய்திருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மும்பையை பின்னணியாக கொண்ட படத்தில் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை கமல் வெளிப்படுத்தியிருந்தார். இந்தப்படத்துக்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம், கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு தேசிய விருது கிடைத்தது.

60-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் நாயகன் திரைப்படம் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி ‘நாயகன்’ படம் நவம்பர் 3-ம் தேதி
ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தை வெளியிடும் மதுராஜ் கூறும்போது, “பிலிமில் எடுக்கப்பட்ட ‘நாயகன்’ படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியுள்ளோம். எஸ்.ஆர்.பிலிம் பேக்டரியிடமிருந்து வாங்கி ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் தமிழ்நாட்டில் 120 திரையரங்குகளிலும் கேரளாவில் 60 திரையரங்குகளிலும் கர்நாடகாவில் 50 திரையரங்குகளிலும் வெளியிடுகிறோம்” என்றார்.

காலத்தால் அழிக்க முடியாத வியப்பின் சரித்திர குறியீடாக இன்று வரை நாயகன் வாழ்ந்து வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading