தங்கம் விலையானது நாளுக்கு நாள் புது புது ஆச்சரியங்களை தந்து வருகிறது. . கடந்த சில நாட்களாக சரிவை கண்டு வந்த தங்கம் விலை இன்றும் குறைந்தது. அதன் படி இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.340 குறைந்து ரூ.13,000-க்கும், சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் எதிர்ப்பாராத விதமாக மாலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் படி கிராமுக்கு ரூ. 250 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,250-க்கும், சவரனுக்கு ரூ. 2,000 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன் படி காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.240-க்கும், ஒரு கிலோவுக்கு (கட்டி வெள்ளி) ரூ. 10,000 குறைந்து ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மாலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 250-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.







