முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா சினிமா

’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வேண்டும் – ஏ.ஆர்.ரகுமான்

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை வெல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி 3 மொழிகளில் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. இதனை அடுத்து நடைபெற்ற கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றது.

இதையும் படியுங்கள் : ”அரசியலில் இருந்து வெளிவர கொரோனா தான் காரணம்” – மனம் திறந்த ரஜினிகாந்த்

தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கான இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. உலகளவில் பிரபலமடைந்த இப்பாடல் பல்வேறு நாட்டினரையும் கவர்ந்திழுத்தது. இப்பாடல் ஆஸ்கார் விருதைப் பெறுமா என்று ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதைப் பெற வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கிராமி விருதையும் அது வெல்ல வேண்டும். ஏனென்றால் இந்தியர்களாகிய நம்மில் யாருக்கு எந்தவொரு விருது கிடைத்தாலும், அது இந்திய நாட்டை உயர்த்தும். மேலும் நமது கலாச்சாரத்தின் மீதான பார்வையையும் உயர்த்தும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டி20 உலக கோப்பை; இந்தியா-பாக். அணிகள் இன்று மோதல்

G SaravanaKumar

கிணற்றில் தண்ணீரை காணோம்…. புவியியல் துறை அதிகாரியிடம் புகார்

Web Editor

2000க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது