கன்னியாகுமரி மாவட்டம், மூழுக்கோடு அருகே ஊர் குளத்தை எந்தவித கனரக வாகனங்கள் உதவியின்றி, தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவந்த தேசிய ஊரக பணியாளர்களுக்கு கிராம மக்கள் அறுசுவை விருந்து வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் மூழுக்கோடு ஊராட்சிக்குட்பட்ட புண்ணியம் அருகில் அமைந்துள்ளது கொல்லாக்குளம். இந்த குளம் சுமார் 15வருடங்களுக்கு மேல் தூர்வாரபடாமல் பயனின்றி இருந்தது. இந்த குளத்தை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ், இருபத்தி நான்கு லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள், கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கியது. பொதுவாக
குளங்கள் தூர்வாரும்போது, கனரக வாகனங்களை பயன்படுத்தி தூர்வாரும் பணிகள்
நடைபெறுவது வழக்கம் .
ஆனால், கொல்லாக்குளத்தை எந்த வித கனரகவாகனங்கள் உதவியின்றி , முழுவதுமாக 300க்கும் மேற்பட்ட தேசிய ஊரக வேலை பணியாளர்கள் குளத்தை தூர்வாரி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர். இதனால் பல்வேறு கிராமங்கள் பயன் பெறும். இந்த குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு , அப்பகுதி கிராமமக்கள் ஒன்றிணைந்து அறுசுவை உணவுடன் அசைவ விருந்து படைத்து மகிழ்வித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு முன்னதாக, சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை பாராட்டி
நினைவுபரிசுகளையும் வழங்கினர் .
–கு.பாலமுருகன்