மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் மணமக்களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிசைகளும் வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடியை அடுத்த துர்கா பரமேஸ்வரி ஆலயத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் கார்த்திக் மற்றும் புனிதா என்ற மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது.
இதில் மணமக்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள திருமண சீர் வரிசைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு திருமாங்கல்யம், ஆடைகள், மற்றும் உணவு போன்ற பொருட்களை கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்படும் செய்திருந்தது.
இதை தொடர்ந்து திருமண நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட அறங்காவல் துறை தலைவர் சுவாமி நாதன், நகர் மன்ற தலைவர் செல்வராஜ், துணை தலைவர் எஸ் எஸ் குமார், வார்டு உறுப்பினர் ரமேஷ் மற்றும் பல்வேறு திமுக பிரமுகர்கள் என பலர் பங்கேற்றனர்.
கோ. சிவசங்கரன்
இந்து அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் – மணமக்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் மணமக்களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிசைகளும் வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடியை அடுத்த துர்கா பரமேஸ்வரி ஆலயத்தில் இந்து…






