வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
தருமபுரியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். இலவசங்களை, வளர்ச்சி திட்டங்கள் என்று கூற முடியாது. ஒன்பது லட்சம் கடன் சுமை என்கிறார்கள். அதை எப்படி வளர்ச்சித் திட்டங்களாக காட்டுவது?
தமிழ்நாட்டில் அரசு விற்பனை செய்தால் அது நல்ல சாராயம், மக்கள் தயாரித்து விற்பனை செய்தால் அது கள்ளச்சாராயம். மோசமான ஆட்சி முறையால் அடிமை மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.
மதம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. பங்காரு அடிகளாரின் மறைவு ஆன்மீகத்திற்கு பேரிழப்பு. அது தமிழ் இனத்திற்கே பேரிழப்பு.
ஆளுநருக்கு சங்கரய்யா யார் என்று தெரியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு என்ன மரியாதை? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு இல்லாத அதிகாரம் ஆளுநருக்கு எங்கிருந்து வந்தது? ஆளுநர் பதவியே தேவையில்லாதது. . அவைக்கு இல்லாத உரிமை தனிநபருக்கு வழங்கப்பட்டிருப்பது தவறு.
இதையும் படியுங்கள் : ‘மார்க் ஆண்டனி’ பட விவகாரம் – நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
நீட் தேர்வில் தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டீர்களா? காங்கிரஸ் கையெழுத்திட்டது, பாஜக வளர்த்திருக்கிறது. இந்த கொடுமையை என்ன செய்வது? பிரதமர் மோடி எதைப் பற்றியும் பேசமாட்டார். மன் கி பாத்தில் கதவை சாத்திக்கொண்டு பேசுவார்” என்று தெரிவித்தார்.







