ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் – பாதுகாப்பாக மீட்ட மாவட்ட ஆட்சியர்!

சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு மாவட்ட ஆட்சியர் அரசு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.  ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்திலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு ஆம்னி…

சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு மாவட்ட ஆட்சியர் அரசு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். 

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்திலிருந்து
பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு ஆம்னி வேன் பொண்ணப்பந்தாங்கல் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது.  ஆம்னி வேன் புதுப்பட்டு காலனி அருகே வந்தபோது எதிர்பாராமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்னி வேனில் இருந்த மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த நிலையில் அவ்வழியாக ஆய்வுக்கு சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி விபத்துக்குள்ளான ஆம்னி வேனை கண்டு அதில் சிக்கி இருந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்டார்.

தொடர்ந்து பள்ளத்திலிருந்து ஆம்னி வேனை தனது வாகன மூலம் கயிறு கட்டி சாலைக்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர் மாணவர்களை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் அவர்களின் வாகனத்தில் ஏற்றி பொன்னப்பந்தங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளார்.  மாவட்ட ஆட்சியரின் இந்த துரித நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.