திருப்பூரில் இருந்து முறையான ஆவணங்களின்றி வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூட்டை பனியன்களை வணிகவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தின் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாநகரங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கென உலகின் ஜவுளித்துறையில் தனி மதிப்பு இருக்கிறது.
மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிற மாநிலங்களுக்கு அனுப்ப மற்ற தபால் சேவைகளை காட்டிலும் ரயில் மூலம் அனுப்பும் முறையில் கட்டணம் குறைவு என்பதால் உற்பத்தியாளர்கள் ரயிலையே பெரிதும் விரும்புகின்றனர்.இவ்வாறு அனுப்பபடும் பொருட்களை முறையாக ஜி.எஸ்.டி பதிவு செய்வது கட்டாயமாகும். இந்நிலையில் வணிகவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில் முறையான ஆவணங்களின்றி அனுப்ப தயாராக இருந்த 50 மூட்டை பனியன்களை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட 50 மூட்டை பனியன்களை ஈரோடு வணிகவரித்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.இந்த திடீர் ஆய்வால் ரயில்வே வளாகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
—-வேந்தன்







