அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நயினார் நாகேந்திரன் …!

தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணமலை இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “இன்றைய தினம் பிறந்த நாள் காணும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் என் ஆருயிர் தம்பி திரு. அண்ணாமலை அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் சிறந்த ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.