3-வது டி20 போட்டி : இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று பிற்பகல் 12:30 மணிக்கு தொடங்கிறது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கிறைஸ்ட்சா்ச் நகரில் அக்.22-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக விளையாடி 226 என்ற இலக்கை இரண்டு பந்துகள் மிச்சமிருக்க 19.4 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது,

தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி 20 அக்.24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 போட்டி இன்று பிற்பகல் 12:30 மணிக்கு நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் ஹென்றி மைதானத்தில் நடைபெறுகிறது. தசைப்பிடிப்பு காரணமாக 2-வது போட்டியில் இருந்து விலகிய இஷான் கிஷன் இதுவரை குணமடையாததால் 3-வது போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். அவருக்கு பதில் 2-வது போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி 3-வது போட்டியிலும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச பட்டியல் :

இந்தியா : சஞ்சு சாம்சன் (wk), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (c), திலக் வர்மா, நமன் திர், நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்

நியூசிலாந்து : ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் (wk), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, ஜேக்கப் டஃபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.