மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?

தமிழ் நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4) தொடங்குகிறது. இதனால் தமிழ் நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிவரை தமிழ் நாட்டின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல்
1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.