பாஜக சட்டமன்றக் குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு!

பாஜக சட்டமன்றக் குழு தலைவராக, நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்திருந்த பாஜக, 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது.…

பாஜக சட்டமன்றக் குழு தலைவராக, நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்திருந்த பாஜக, 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்நிலையில், அந்த கட்சி எம்.எல்.ஏக்களில், சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னை தி.நகரில் கிஷன் ரெட்டி தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற பாஜக குழு தலைவராக, திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, சட்டமன்றத்தைத் தாங்கி பிடிக்கும் 4 தூண்களாக பாஜகவின் 4 உறுப்பினர்கள் இருப்பார்கள். தமிழகத்தில் தாமரை மலராது என்றார்கள். தற்போது தாமரை மலர்ந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறோம். அதே நேரம், தவறுகளைச் சுட்டிக் காட்டவும் தயங்க மாட்டோம் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.