அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: சென்னை காவல் ஆணையரிடம் மனு!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிகோரி சென்னை காவல் ஆணையரிடம் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா மனு அளித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.…

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிகோரி சென்னை காவல் ஆணையரிடம் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா மனு அளித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்தந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் நாளை மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், திட்டமிட்டபடி எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா மனு அளித்தார். பின்னர் செய்திளார்களை சந்தித்த அவர், விதிமுறைகளை முறையாக கடைபிடித்து தொண்டர்கள் இல்லாமல் கூட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.