நாகாலாந்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் அரசு மருத்துவ கல்லூரி!

நாகாலாந்து மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்ற 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரிக்காக தமிழ்நாடு தொடர் முயற்சிகள் எடுத்து வரும் நிலையில்,  மாநிலம் என்ற அந்தஸ்தைப்…

நாகாலாந்து மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்ற 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரிக்காக தமிழ்நாடு தொடர் முயற்சிகள் எடுத்து வரும் நிலையில்,  மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்று 60 ஆண்டுகள் ஆன நிலையில், முதல் மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு சகோதரி மாநிலங்களில் நாகாலாந்தும் ஒன்று.  நாகாலாந்து,  கடந்த 1963ஆம் ஆண்டு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைநகரம் கோஹிமா.  இதில் 12 மாவட்டங்கள் உள்ளன.  நாகாலாந்து மாநிலம் முழுவதும் ஒரே மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டது.

இந்த நிலையில்  அக்டோபர் இரண்டாம் வாரத்தில்,  நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில்,  மிக அழகான பின்னணியில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.  தற்போது,  மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:18 ஆண்டுகளாக கியாஸ் பில் செலுத்தாத தம்பதி: ரூ.11 லட்சத்தை ஒரே நேரத்தில் வசூலித்த நிறுவனம்!

மருத்துவக் கல்வியின் தேவையை நிறைவேற்றுவதுடன் நாகாலாந்து மக்களின் சுகாதார பாதிப்புகளையும் ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த மாநிலத்தில் பட்டியல் பழங்குடியின மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்.  இந்த மாநிலத்தில் ரயில் போக்குவரத்து என்பது மிக மிகக் குறைவு.  இங்கு திமாபூரில் ஒரே ஒரு விமான நிலையமும்,  ரயில் நிலையமும் அமைந்துள்ளது.  மலைப்பகுதி என்பதால், சாலைப் போக்குவரத்தும் பெரிய அளவில் இல்லாததால்,  சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே இருக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.