முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சட்டம்

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பு; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களூக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது தொடர்பாக உரிய விளக்கத்தை மத்திய அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாலின பாகுபாட்டால் தேசிய பாதுகாப்பு அகாதமியில் மாணவிகள் சேர்வதற்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் குஷ் கல்ரா தொடர்ந்த பொதுநல வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே ,
“பெண்கள் பல துறையில் சாதித்து வந்தாலும், பாலின பாகுபாடு காரணமாக பல துறைகளில் பெண்கள் நுழைய இன்னும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு அகாதமியில் மாணவிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது தொடர்பாக யுபிஎஸ்சி (UPSC)மற்றும் மத்திய அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர சேவைப் பணிகள் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

அதிமுக ஆட்சிக்கு மக்கள் மட்டுமல்லாமல் இயற்கையும் சாதகமாக இருக்கிறது: முதல்வர்!

Karthick

சமூக வலைத்தளங்களில் பரவும் விசிகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்!

Karthick

மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Jeba