மகன் வீட்டில் இல்லாததால் ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த மர்ம கும்பல் – அம்பத்தூரில் பரபரப்பு!

சென்னை அம்பத்தூரில் மகனை தீர்த்து கட்ட வந்தவர்கள், அவர் வீட்டில் இல்லாததால் ஆத்திரம் தீர தந்தையை கொலை செய்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த சண்முகபுரம் பகுதியை…

சென்னை அம்பத்தூரில் மகனை தீர்த்து கட்ட வந்தவர்கள், அவர் வீட்டில் இல்லாததால் ஆத்திரம் தீர தந்தையை கொலை செய்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அம்பத்தூரை அடுத்த சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் மேக்ஸ்வெல்(53). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேக்ஸ்வெல் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் சுமார் மாலை 5.30 மணி அளவில் வீட்டில் மது போதையில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். இவரது உடம்பின் பின்பக்கம் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால் அடிக்கடி வலி ஏற்படுவதால் மது அருந்தி வந்துள்ளார்.

அன்றும் வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் திடீரென்று பட்டாக்கத்தியுடன் வீட்டில் புகுந்துள்ளனர். அப்போது அங்கு படுத்திருந்த மேக்ஸ்வேலை சரமாரியாக தலை, கை, கால்கள் பகுதியில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மேக்ஸ்வெலின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது மேக்ஸ்வெல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் மேக்ஸ் வெலின் மூத்த மகன் மோசஸ் (28) அதே பகுதியில் கடந்த ஆண்டு உதயா என்பவர் கொலை வழக்கில் குற்றவாளியாக சிறைக்கு சென்று தற்போது வெளியே வந்து கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மோசஸை தீர்த்து கட்ட வந்தவர்கள், அவர் வீட்டில் இல்லாததால் தந்தையை வெட்டிக் கொலை செய்து விட்டதாக முதல் கட்ட தகவல் வெளிவந்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.