முதுமலை வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் புலி!

முதுமலை வனப்பகுதியில் தொடர்ந்து மர்மமான முறையில் புலிகள் இருந்து வருகின்றன. கடந்த மூன்று வாரங்களில் 4 புலிகள் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் யானை, புலி,…

முதுமலை வனப்பகுதியில் தொடர்ந்து மர்மமான முறையில் புலிகள் இருந்து வருகின்றன. கடந்த மூன்று வாரங்களில் 4 புலிகள் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.  இதில் அன்மைக்காலமாக முதுமலை வனப்பகுதியையொட்டி மசினகுடி, மாயார், சிங்காரா, பொக்காபுரம், வாழை தோட்டம், சிறியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மூன்று வாரங்களில் நடுவட்டம் பகுதியில் பெண் புலியும், சீகூர் வனப்பகுதியில் இரண்டு புலி குட்டிகள் மர்மான முறையில் இறந்து கிடந்தது.
புலிகளை பிரேத பரிசோதனைசெய்யப்பட்டு உடற் பாகங்கள் ஆய்விற்காக சென்னை ஆய்வகத்திற்கு வனத்துறையினர் அனுப்பியுள்ளனர். மேலும் கார்குடி வனப்பகுதிக்கு உட்பட்ட  C9 பாலம் கல்லல்லா பகுதியில் மர்மமான முறையில் இன்று ஆண் புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது.  இதனை ரோந்து பணியில் ஈடுபட்ட வன பாதுகாவலர்கள் கண்டு புலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.  இச்சம்பவம் வனவிலங்குகள் ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.