சந்திரயான்3 வெற்றி: நிலவில் நிலம் வாங்கிய ஜம்மு தொழிலதிபர்?

சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து நிலவில் நிலம் வாங்கியுள்ளதாக ஜம்முவை சேர்ந்த தொழிலதிபர் தெரிவித்துள்ளார். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது.…

சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து நிலவில் நிலம் வாங்கியுள்ளதாக ஜம்முவை சேர்ந்த தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஜம்முவை சேர்ந்த தொழிலதிபரும் கல்வியாளருமான ரூபேஷ் மாசன் (49) ஆகஸ்ட் 25ஆம் தேதி நிலவில் நிலம் வாங்கியுள்ளார்.

“நான் நியூயார்க் நகரத்தில் உள்ள தி லூனார் ரெஜிஸ்ட்ரியில் இருந்து நிலத்தை வாங்கினேன், ஆகஸ்ட் 25 அன்று அது சான்றளிக்கப்பட்டது,” என்று மாசன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 675 பிரபலங்கள் மற்றும் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் நிலவில் நிலம் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே சில பிரபலங்கள் நிலவில் நிலம் வைத்திருப்பதாக கூறி வருகின்றனர். ரியல் எஸ்டேட் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கும் உலகில், இந்த பிரபலங்கள் தங்கள் முதலீடுகளை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

நடிகர் ஷாருக்கான், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், பிரியங்கா சாஹர் சவுத்ரி மற்றும் அங்கித் குப்தா உள்ளிட்டோர் நிலவில் நிலம் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.