மிசோரம் அருகே மியான்மர் ராணுவ விமானம் விபத்து: 6 பேர் படுகாயம்!

மிசோரம் அருகே 14 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.   மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் பகுதிகளை…

மிசோரம் அருகே 14 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் பகுதிகளை இந்த ஆயுதக் குழுக்கள் கைப்பற்றி வருகின்றனர்.  இதனையடுத்து மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்து இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைவது தொடருகிறது.

இதுவரை 200க்கும் மேற்பட்ட மியான்மர் ராணுவ வீரர்கள்,  இந்தியாவுக்குள் நுழைந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.  பாதுகாப்பு படையினர் இவர்களை மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  வீட்டுப்பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்: பல்லாவரம் எம்எல்ஏ-வின் மகனை பிடிக்க தனிப்படை!

இந்த நிலையில் 184 மியான்மர் ராணுவ வீரர்களை இந்திய பாதுகாப்பு படையினர் அந்நாட்டிடம் ஒப்படைக்க தயாராக இருந்தனர்.  இந்த ராணுவ விரர்களை அழைத்து செல்வதற்காக மிசோரம் மாநிலத்தின் லெங்குபி விமான நிலையத்தில் மியான்மர் ராணுவ விமானம் தரை இறங்கியது.

அப்போது அந்த விமானம் திடீரென விபத்திக்குள்ளானது.  விமானத்தில் விமானி உட்பட 14 பேர் இருந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர்.   8 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.  இவ்விபத்தில் சிக்கி காயமடைந்த 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.