தேசத் தந்தை யார்? ஆளுநரின் பேச்சால் புதிய சர்ச்சை!

1947 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் முக்கிய காரணம் என ஆளுநர் ரவி பேசியுள்ளார்.  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்…

1947 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் முக்கிய காரணம் என ஆளுநர் ரவி பேசியுள்ளார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது:

1947 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் முக்கிய காரணம்.  மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் அளிக்கவில்லை.  நேதாஜியே காரணம் என்பதை அப்போதைய இங்கிலாந்து பிரதமர் அட்லி பதிவு செய்துள்ளார். இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேற ஒத்துழையாமை இயக்கம் காரணமில்லை என அப்போதைய பிரதமர் அட்லி பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.  நேதாஜியின் இந்திய ராணுவ படையிலேயே  தமிழர்கள் அதிக அளவில் இருந்தனர்.  வேலு நாச்சியார்,  வ.உ.சி. ஆகியோரைப் போல்  நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்.

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.