அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால் தினந்தோறும் காவிரி குடிநீர் வழங்கப்படும் என்று கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்துள்ளார்.
கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். காந்திபுரம், பழனியப்பா தெரு, 80 அடி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தபோது அவருக்கு ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் மத்தியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக ஆட்சியில் இருந்தபோது காவிரி குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகிக்கப்பட்டதாக கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது என்று கூறினார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த்தும் தினந்தோறும் காவிரி குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.







