#IPL2026 | பஞ்சாப் – ஐதராபாத் அணி இன்று மோதல்!

நியூ சண்டிகர் மைதானத்தில் இன்று பஞ்சாப் – ஐதராபாத் அணிகள் மோதுகிறது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப், இஷான் கிஷன் தலைமையிலான ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகர் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. 3 போட்டிகளில் ஆடியுள்ள பஞ்சாப் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேவேளை, 3 ஆட்டங்களில் ஆடியுள்ள ஐதராபாத் 1 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை – டெல்லி அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.